9 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0
116

வற் வரியை செலுத்தாமல் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு செய்யும் ஒன்பது மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிறுவனங்களிடமிருந்து 720 கோடி ரூபா பெறப்படும் எனவும், இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வரி செலுத்தாத இரண்டு நிறுவனங்கள் மீது ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.