நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 9 மாவட்டங்களுக்கு தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.