90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை!

0
203

90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.