கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் pregabalin மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபெருக்கி பெட்டிகளில் குறித்த கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.