9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

0
162

9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பவுசரில் இருந்து பெற்றோலை லொறியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெற்றோல் மண்ணெண்ணெய்க்கு பதிலாக மன்னார் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.