மட்டு.ஞானசூரியம் சதுக்கம் கிராம
மக்களுக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கல்

0
209

இலங்கை நாட்டுக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் சிபாரிசின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கு வழங்கப்பட்ட நிவாரண உலர்வுணவு பொதிகளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள உலர்வுணவு பொதிகளில் இனறைய தினம் பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம் கிராம சேவையாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கப்பட்டன .

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம் கிராம சேவையாளர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி எம் . ஜெபநேசன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் , மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா , கிராம சேவை உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்