மட்டு.பாலமுனை பிரதேசத்தில் தற்காலிக
வீடொன்றில் தீப்பரவல்

0
229

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் தற்காலிக வீடொன்றில் நேற்றுமாலை ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த தற்காலிக வீடு எரிந்து சேதமடைந்துள்ளது.

கர்பலா வீதி பாலமுனை 10இலுள்ள தற்காலிக வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்த சமயம் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அயலவர்கள் பொதுமக்கள் தீயை அணைத்ததுடன் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.