திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள்
நீண்ட வரிசைகளில் காத்திருப்பு

0
427

அம்பாரை திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேச விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் ஆகியோர் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் ஊடாக அட்டைகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் அதேவேளை, நாளாந்த வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்களும் வரிசைகளில் காத்திருந்தனர்.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்திற்கு கடந்த இரு வாரங்களாக பெற்றோல் விநியோகம் இடம்பெறாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே, தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு திருக்கோவில் பிரதேச செயலாளர், எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகத்தினர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலியக் கூட்டுதாபனத்துடன் கலந்துரையாடி விரைவாக திருக்கோவில் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோலைப் பெற்றுக் கொள்ளுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டார்.