எரிபொருள் விநியோகத்தை விரைவாக முன்னெடுக்குமாறு ஆலோசனை!

0
155

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடு முழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும் முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.