1000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு விநியோகம்

0
185

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாமாங்கம். கூழாவடி ஆகிய கிராமசேவையாளர் பிரிவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கிராம சேவகர் பிரிவுகளினுடாக வழங்கப்பட குடும்ப விநியோக அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாத்திரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டக்களப்பு கூழாவடி டிஸ்க்கோ விளையாட்டு மைதானத்தில் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் நடவடிக்கையின் கீழ் இன்றைய தினம் 12.5கிலோகிராம் 1000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.