அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது!

0
281

அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

மூலமூர்த்தியான எம்பெருமான் ஐயனாருக்கு பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்ற வைபவம் இடம்பெற்று கொடிமரப் பூஜைகள் இடம்பெற்றன.

பின்னர் மூலமூர்த்தியான எம்பெருமான் ஐயனார் பரிவாரத் தெய்வங்களுடன் எழுந்தருளியாக, உள்வீதி மற்றும் வெளிவீதியூடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளைப் பெற்றுச் சென்றனர்.