மட்டு.மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பொதிகள் வழங்கல்

0
168

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான அரிசி பொதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’அமைப்பு முன்னெடுத்துள்ளது.

‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பின் கிழக்குமாகாண இணைப்பாளர் எஸ் .சியான் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான அரிசி பொதிகளை வழங்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

ஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகளின் நிதி பங்களிப்பில் செயல்படுகின்ற ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரம் ,கல்வி ,பொருளாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.