யாழில் நாளை பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது!

0
358

யாழ் மாவட்டத்தில் நாளை பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாதுஎன மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 23 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 06 எரிபொருள் நிரப்புநிலங்களில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மிகுதி 17 எரிபொருள் நிரப்ப நிலையங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட வுள்ளதன் காரணமாக நாளைய தினம் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெற மாட்டாது எனவே நாளைய தினம் பொதுமக்கள் எரிபொருள் பெறுவதற்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது .

அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகம்

உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள், மாகாண சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியர்களுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைக்கமைவாக எதிர்வரும் சனிக்கிழமையாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் கிடைக்கப்பெறும் கீழ்க்குறிப்பிட்ட எரிபொருள் விற்பனை நிலையங்கள் தவிர எனைய எரிபொருள் விற்பனை நிலையங்களில் அச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தங்களுடனும் வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனும் கலந்துரையாடியதற்கமைவாக சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே நாளை சனிக்கிழமை (2122.08.04 திகதி) கீழ்க்குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக ஏரிபொருள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன் இவர்களுடன் இணைத்து தனியார்துறையில் கடமையாற்றும் சுகாதார. உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

1.கொக்குவில்  AMT

2. இருபாலை AMT கோப்பாய்

3. திருமதி சுலோகராணி தெல்லிப்பளை எரிபொருள் நிரப்பு நிலையம்

4. திரு.எஸ்.சுதர்சன் நாவற்குழி ரிபொருள் நிரப்பு நிலையம்

5. புலோவி MPCS எரிபொருள் நிரப்பு நிலையம்

வேலணை MPCS ரிபொருள் நிரப்பு நிலையம்.

அரச உத்தியோகத்தர்கள். ஓய்வூதியர்கள் தமது உறுதிப்படுத்தலுக்காக அலுவலக அடையாள அட்டை ஓய்வூதிய அடையாள அட்டை அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட ரிபொருள் விநியோக அட்டை எடுத்துச் செல்லுதல் வேண்டும். QR code அடிப்படையிலேயே இவ்விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதால், இவ்வாரம் (01.08.24822 05.08.2022 வரை) எரிபொருள் பெற்றவர்கள் இவ்விநியோகத்தில் உள்வாங்கப்படமாட்டார்கள்.

மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டும் ரிபொருள் வழங்லுவதனால் எரிபொருள் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிலையங்களிலும் 1500 போட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்கக்கூடியதாக இருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கும்போது ஆண்கள். பெண்களென தனித்தனியான வரிசைகளை அமைப்பது பொருத்தமான் இருக்குமாகையால் கரிபொருள் நிரப்பு.சிறிலைய முகாமையாளர்களுடன் தங்கள் அலுவலர்களும் இணைத்து இந்நடைமுறையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்,