35வயதுக்குமேற்பட்டவர்களுக்கான மருத்துவ
சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு

0
238

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேசசெயலகபிரிவில் உள்ள பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் வழங்கப்படும் சுகாதார மருத்துவ சேவையினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 35வயதுக்குமேற்பட்ட சகலரும் மருத்துவ பரிசோதனைகளுடன் மருத்துவ அடையாள அட்டை பெற்றுக்கொள்ள அவசியத்தை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வட்டையின்மூலமாக நோய்விபரங்கள்,காப்புறுதி, அக்ரகாரா போன்றவற்றை பெற்றுக்கொள்ள இவ்வட்டை கட்டாயப்பயன்படுத்தப்பட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மருத்துவ பரிசோதனைக்கு அமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட 48 கிராமசேவையாளர் பிரிவுகளில் 35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தொற்றும் மற்றும் தொற்றா நோய்த்தாக்கங்களிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையுடன் இளம்வயதில் ஏற்படும் மரணவீதத்தை எதிர்காலங்களில் கட்டுப்படுத்துவதுடன் ,சகல நோயாளர்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் மருத்துவ சிகிச்சை முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் இன்றையதினம் ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில் வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்எஸ்.எ.ஜெ .இனியன் தலைமையில் மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் நோயாளர்களின் மருத்துவ அடையாள அட்டைகளுக்கான வைத்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.