கொரோனா தொற்று அதிகரிப்பு

0
391

இலங்கையில் பல பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்களும் மரணங்களும் மீண்டும் ஏற்படுவதால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் விழிப்பாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்

பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.