நீண்ட காலமாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக சவுக்கு மரத்தை வெட்டி, விறகுக்காக விற்பனை செய்ய முற்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை, 12 பேரும், பருத்தித்துறை பொலிஸரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நாளை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். மிக நீண்ட காலமாக, மணற்காடு சவுக்கு மரங்கள், விறகுக்காக வெட்டப்பட்ட அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று காலை, அவரது தலைமையில், கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.