யாழ்முயற்சியாளர் -2022 சிறு தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியது!

0
239

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி யாழ்ப்பாண சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது, யாழ் முயற்சியாளர் 2022 என்னும் தொனிப் பொருளில் குறித்த சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி இடம் பெறுகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிர தீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு விற்பனை கண்காட்சியினை நாடாவெட்டி திறந்து வைத்தார்,