இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனையில் வீடு  ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர்  சடலமாக மீட்பு!

0
168

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடு  ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர்  சடலமாக மீட்கப் பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் மஞ்ஞத்தடி பகுதியில் கணவர் இறந்த நிலையில் குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்த நிலையில்  குறித்த பெண்ணின் 4 பிள்ளைகளில் ஒருவர் இயக்கச்சி பகுதியிலும் இருவர் சுவிஸ் நாட்டிலும் வசித்து வருவதோடு ஒரு பிள்ளை இறந்த நிலையிலும் உறவினர்களின் உதவியுடன்  தெய்வேந்திரம் வசந்தி எனும்  62வயதான குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இன் நிலையில் வழமை போல் அவரது சகோதரர் மதிய உணவை வழங்குவதற்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக தனது சகோதரியை இனங்கண்ட நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததோடு சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

மது போதையில் குறித்த சம்பவம் இடம்பெற்றிக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.