
யாழ். அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு கோழிக்குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
ஏனைய கோழிக்குஞ்சுகளைப் போல இந்த கோழிக்குஞ்சும் சுறுசுறுப்பாக காணப்பட்ட நிலையில் அப்பிரதேச மக்கள் கோழிக்குஞ்சினை பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த கோழிக்குஞ்சு இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியருகிறது.
குறித்த கோழிக்குஞ்சு சுறுசுறுப்பாக காணப்பட்டுள்ள போதும் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.