அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அழைப்பு

0
155

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட அம்பாரை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசதில் அங்கத்தவர்களாக இணையுமாறு சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர்
எஸ்.லோகநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சமாசம் இடைகாலங்களில் இருந்த நிர்வாகிகளின் அசமந்த போக்கு காரணமாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

எனினும், 2019ம் ஆண்டு எனது தலைமையில் இருக்கும் இயக்குனர் சபையின் நிர்வாகிகள் மற்றும்
உத்தியோகதர்களினதும் ஒத்துழைப்புடன் இச் சமாசத்தை சிறப்பாக இயக்கி வருகிறோம். இதேவேளை 2020ம் ஆண்டு சமாசம் இலாபத்தையும் பெற்றுள்ளோம்.

தற்பொழுது நெதர்லாந்து நாட்டின் மனிதநேய கூட்டுறவுசங்கம் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாதினரது ஒத்துழைப்பு அனுசரனையுடன் 5 ஆண்டு திட்டத்திற்கான விவசாய ஊக்குவிப்புக்கான வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

2021 – 2022ம் ஆண்டுக்கான எனது தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய இயக்குனர் சபை சிறப்பாகவும் தியாக அற்ப்பணிப்புடன் அம்பாறை மாவட்டத்தில் பின் தங்கிய தமிழ் கிராமங்களையும் அங்கு வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி சுகாதாரம் கலாசாரம் அபிவிருத்தி போன்றவற்றை 2022ம் ஆண்டில் நடைமுறைபடுத்திட உறுதி கொண்டுளோம்.

எனவே அம்பாறை மாவட்டத்தில் சகல தமிழ் கிராமங்களில் உள்ள சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கங்களும் எமது சமாசத்தில் தமிழ் மக்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அங்கத்தவர்களாக இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அச்செய்தி குறிப்பிட்டுள்ளார்.