மட்டு.பனிச்சையடி அனைத்துலக நாடுகளின்
அன்னை ஆலய வருடாந்த திருவிழா

0
140

மட்டக்களப்பு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று மாலை இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் 16 வது ஆண்டு திருவிழா .பங்குத்தந்தை பயஸ் பிரசன்னா அடிகளார் தலைமையில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 28 காலை அருட்பணி .எக்ஸ்.ஐ .ரஜீவன் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது

ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலி இடம்பெறுவதுடன் எதிர்வரும் சனிக்கிழமை காலை பங்கு பிள்ளைகளுக்கான திவ்விய நற்கருணை, உறுதிப்பூசுதல் அருட்சாதனங்கள் மறைமாநில ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால் வழங்கப்பட்டு மாலை அன்னையின் திருச்சுரூப பவனியும் தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடும் இடம்பெறவுள்ளது

கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த திருவிழாவின் முதல் நவநாள் திருப்பலியினை அருட்பணி ஜூலியன் அடிகளாரினால் ‘அன்னை மரியாளைப்போல் இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்’ எனும் கருப்பொருளில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டன .