நெல் அறுவடைக்கு எரிபொருள் விநியோகம்!

0
141

திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது விவசாய நெல் அறுவடை இடம் பெற்று வருவதுடன் அதற்கேற்றவகையில், எரிபொருள் விநியோகமும் சீராக இடம் பெறுகின்றது.

முள்ளிப்பொத்தானை எரி பொருள் நிரப்பு நிலையம் ஊடாக, கமநல அபிவிருத்தி நிலையம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு தலா 10 லீற்றர் என்றவாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.