கொண்டயங்கேணி வாழைச்சேனை
ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய உற்சவம்

0
298

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் 6ஆவது வருடாந்த மஹோற்சவப் பெரு விழா நேற்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கறுவாக்கேனி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் விசேட பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து பாற்குடபவனியாக ஆலயத்தினை சென்று தமது நேற்றிக்கடனை செலுத்தினார்கள்.

தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ நிகழ்வுகள் யாவும் நடைபெற்று எதிர்வரும் 02.09.2022 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் மாலை திருவூஞ்சல் காட்சியும்,கொடியிறக்கமும் நடைபெறும்.திருவிழாக்கள் யாவும் ஆலய தலைவர் ஞா.பேரின்பராசா தலைமையில் ஆலய குரு கிரியாகிராம ஜோதி ஈசான சிவச்சாரியார் சிவஸ்ரீ க.மகேந்திரராஜா குருக்களின் வழிகாட்டலில் மஹோற்சவ பிரதம குரு அலங்கார பூசணம் கிரியாஜோதி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.த.லிங்கேஸ்வர குருக்களினால் நடாத்தப்படும்.