29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவில் மொழி உரிமைகள், சமூக
ஒருங்கிணைப்பு தொடர்பான செயலமர்வு

மனித அபிவிருத்தி தாபனம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டத்தின் ஆதரவுடன் நடை முறைப்படுத்திய மொழி உரிமைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு திட்டம் தொடர்பான மாவட்ட வளர்ச்சி பற்றிய பின் நோக்கு செயலமர்வு இன்று காரைதீவு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.மனித அபிவிருத்தி ஸ்தாபன நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அராங்க அதிபர் வி.ஜெகதீசன் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வின் போது தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டத்தில் இணைந்து சேவையாற்றிய அரச அரசசார்பற்ற உத்தியோகஸ்ர்கள் நினைவுப் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் மாவட்டத்திலும் பிரதேசங்களிலும் சேவையாற்றியவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்டத்தின் நிறுவன பிரதிநிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் விஸேட அதிதிகளாக கல்முனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் ஜனாப். ஏ.சி.ஏ.அஸீஸ்,சம்மாந்துறை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அரச சார்பற்ற நிறுவனங்கள் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜனாப். ஐ.எல்.எம்.இர்பான், அம்பாறை மாவட்ட ஒருமைப்பாட்டு உத்தியோகஸ்தர் எப்.பிரதீஸ்கரன் கலந்து கொண்டார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles