வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்
பொலிஸ் தின நிகழ்வு

0
126

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் உத்தியோகத் தருக்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமாரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது 2022 ஓகஸ்ட் – 31 அன்று ஒய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் சார்ஜன் செ. நந்தகோபால் அவர்களை பாராட்டியதுடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமாரசிறி நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த முறையில் அற்பணிப்புடன் பணியாற்றும் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரட்டி கௌரவிக்கப்பட்டனர்.