மட்டு.ஓட்டமாவடி கட்டுமுறிவு
வீதிக்கு அருகாமையில் குடிநீர் வசதி

0
132

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி கட்டுமுறிவு வீதிக்கு அருகாமையில் பொதுமக்களின் பாவனை கருதி குவைத் நாட்டின் அல்நூர் நிறுவனத்தினால் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌபர் குறித்த அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள களப்பை அண்மித்த பிரதேசமானது நீண்ட காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு அசுத்தப்படுத்தப்பட்ட பிரதேசமாக காணப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முகமாக தவிசாளர் எடுத்த முயற்சியினால் மரங்கள் நாட்டப்பட்டு, சூழல் அழகுபடுத்தப்பட்டு குடி நீர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது

செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அல்நூர் நிறுவனம் மற்றும் குவைத் நாட்டில் இருந்து கொண்டு குறித்த நிறுவனத்திற்கு நிதி உதவி புரியும் உறவுகளுக்கும் தவிசாளர் தமது நன்றியை தெரிவித்தார்.