மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வும்,திருப்பலியும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வும்,திருப்பலியும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு சுடர் ஏற்றிய 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்வினை இன்று கொண்டாடப்படுகின்ற வேளையில் கடந்த 50ஆண்டுகளுக்கு முன் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகில் சிறிய ஆலயமாக இருந்த காலத்தில் ஆலய திருவிழா காலங்களில் மக்களை உள்ளடக்க முடியாத நிலையில் சிறிய ஆலயமாக இருந்த மையாலும் ஆலயம் குடா பகுதியிலும் இருந்தமையாலும் மழைக்காலங்களில் மக்கள் வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டன.
இந்த நிலையில் அன்றைய காலபகுதியில் புளியடிக்குடா பங்கை பொறுப்பேற்ற இயேசு சபை துறவி அருட்பணி
எப்.எக்ஸ்.மேயர் அடிகளாரினால் மக்களின் நலன்கருதி இந்த ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்ட போது இந்த ஆலயம் ஆற்றுக்கு அருகில் இருந்தமையால் அதனை மீன் வடிவில் அமைத்துள்ளார் .
அமெரிக்க படவரைஞர்களின் கலைநுட்பத்தில் உலகில் எங்கும் இல்லாதவாறு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதுடன் குறித்த ஆலயத்தினை காட்டுவதற்கு காரண கர்த்தாவாகிய இருந்த இயேசு சபை துறவி அருட்பணி எப்.எக்ஸ்.மேயர் அடிகளாரின் நினைவு கூறும் வகையில் அடிகளாரின் திருஉருவ சிலை மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு திருஉருவ சிலை திறந்து வைக்கும் நிகழ்வு.
50ஆம் ஆண்டு பூர்த்தி பொன்விழா விசேட கூட்டுத்திருப்பலி பங்குத்தந்தை அன்ரனி மொறாயஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அருட்பணி இயேசு சபை துறவி துறவிகள் ,பங்குமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.