பழைய மாணவர்கள் சங்கத்தினை
புனரமைப்பது தொடர்பான கூட்டம்

0
305

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினை புனரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பழைய மாணவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.பபாகரன் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் மதியழகன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அகிலன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளரும் பாடசாலை பழைய மாணவர் சங்க உபதலைவருமான என்.லோகிஸ் இராணுவ கப்டனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ஜனார்த்தனன் உள்ளிட்ட பழைய மாணவர்கள் சங்க நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் முக்கியத்துவம் சங்கத்தை புனரமைத்து வழிநடத்த வேண்டியதன் அவசியம் குறித்து அதிபரால் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டது. உரையாற்றிய பிரதேச செயலாளர் பழைய மாணவ சங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் இதற்காக சிறந்த நிருவாக கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒழுக்கமுள்ள கல்வி அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் இதற்கு தடையாக உருவாகும் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.கலந்துரையாடலில் புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.