மின்வெட்டு மேலும் நீடிப்பு!

0
143

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 ஆவது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு மேலும் நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.