முதியோர்களுக்கான நடமாடும்
வைத்திய சேவை முன்னெடுப்பு

0
182

பாண்டிருப்பில் முதியோர்களுக்கான் நடமாடும் வைத்திய சேவை முன்னெடுக்கப்பட்டது. சுதேச வைத்திய அமைச்சு மற்றும் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் கல்முனை பிராந்திய சுகாதாரபணிமனை, வடக்கு பிரதேச செயலகம், பிரதேச மாதர் சஙகங்களின்; அமைப்புக்கள் ஆகியன இணைந்து நடத்திய முதியோர்களுக்கான நடமாடும் வைத்திய முகாம் சேவை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முதியோர்கள்; உடல், உள ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள், மருந்துகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இவ் வைத்திய பரிசோதனை முகாம் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.ரிபாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர் எம்.ஏ.நபீல், டாக்டர் ஏ.எஸ்.என்.சுஸான் உட்பட மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர்