விஜயதசமி தினத்தை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் ஏடு தொடக்கல் இடம்பெற்றது!

0
185

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளாகிய விஜயதசமி தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில்ஏடு தொடக்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது

தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது, யாழ்ப்பாண குடா நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்து சிறுவர்களுக்கு ஏடு தொடக்குவதற்காக பல நூற்றுக்கணக்கானோர் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது