

சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில சுழிபுரம் பகுதியில் இடம் பெற்றது.
சுழிபுரம் மேற்கு கலைமக்ள இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைவாக சுழிபுரம் கலைமகள் முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியதினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ் ஜெல்சின், சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவச கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது