ஊடக தர்மத்தை வலுப்படுத்துவத்துவதனுடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள மூன்று நாள் பயிற்சி செயலமர்வு தொடர்பான மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் வன்முறையான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ,வதந்திகளை பரப்புதல் ,போன்ற வன்முறைகளை தூண்ட கூடிய விடயங்களை தடுப்பதற்கான இளைஞர்கள் மத்தியில் ஊடக தர்மம் ,ஊடக சட்டம் போன்ற விடயங்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டமாக ஊடக தர்மத்தை வலுப்படுத்துவத்துவதனுடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பான திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான லிப்ஃற் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கெல் விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் மாட்ட செயலக ஊடக பிரிவுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 900 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்காக விழிப்புணவு செயல்திட்டத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதன்
வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்கள் மூலமாக இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலாக லிப்ஃற் நிறுவன அலுவலகத்தில் செயலமர்வு இன்று நடைபெற்றது.
இதேவேளை குறித்த பயிற்சி செயலமர்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கு பற்றுவதற்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது.
லிப்ஃற் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கெல் விடாஸ் நிறுவனம் பிரதிநிதி ரமேஷ் நாசர் . மாவட்ட ஊடக பிரிவின் அதிகாரி வி . ஜீவானந்தம் , , டுகைவ நிறுவன திட்ட முகாமையாளர் தயாநிதி உட்பட டுகைவ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .