இவ்வருடத்திற்கான காலாண்டு
பொலிஸ் பரிசோதனை நடவடிக்கைகள்

0
128

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இவ்வருடத்திற்கான காலாண்டு பொலிஸ் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (7) நடைபெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசன்த பண்டார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.வி.யு.சுகதபால வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி. நிலங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொலிசாரின் அணி வகுப்பு ஒழுங்கு நடைமுறைகள்,அவர்களது ஓழுக்கம்,அலுவலக சுத்தம்,நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தும் வாகனங்களின் தற்போதைய தொழிற்பாட்டு தன்மை,மற்றும் வீதி போக்குவரத்து பொலிசாரின் நடைமுறைகள் போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

வருடத்தில் 2 தடவைகள் இவ்வாறான பரிசோதனை நடவடிக்கைகள் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.