மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், ‘உலக உள நல தினம்’ அனுஷ்டிப்பு

0
164

‘அனைவரினதும் உள நல மற்றும் நல்வாழ்வை உலகளாவிய முன்னுரிமை யாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், ‘உலக உள நல தினம்’ அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட உள நல பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையில், உலக உள நல தினம், இன்று காலை 10.00 மணியளவில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட உள நல மருத்துவ அதிகாரி பசில் ஜோகேஸ் லியோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மருத்துவர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, உள நல பிரிவு பணியாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன் போது, பல நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள நல பிரிவில் கடமையாற்றும் பணியாளர்களுக்கு, அவர்களின் சேவையை பாராட்டி, நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.