கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய
மாணவர்களுக்கு கற்றல் உபகாரணங்கள் வழங்கள்

0
121

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.பொன்னையா இராமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்விற்கு பாடசாலையின் பிரதி அதிபர் திரு.கணபதிப்பிள்ளை நாகேந்திரன் மேலும்பாட சாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான திரு.லோ.கஜரூபன், மற்றும் திரு. எஸ்.காந்தன் திரு.வாணன், திரு.சங்கீத் ஆகியோரினால் தரம் 01தொடக்கம் 05 வரை கல்விகற்கும் 49 மாணவ மாணவிகளுக்கு 4000ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் பாடசாலை பைகள்,கொப்பிகள், பென்சில்கள் இன்னும் பல பெறுமதி மிக்க மாணவர்களுக்கான பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டது.