இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்களை சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது. மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கியூலெக்ஸ் சின்ரெல்ஸ் எனும் நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இதே நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையிலிருந்து இனங்காணப்பட்ட மற்றைய நுளம்பு இனம் கியூலெக்ஸ் நியய்ன்புலா என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் பரவலாக காணப்படும் இந்த குறிப்பிட்ட வகை நுளம்பு, பெருமூளை மலேரியா எனப்படும் நோயை பரப்புவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பரவியுள்ள இந்த நுளம்பு இனம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.