மட்டு.வந்iதாறுமூலை ஸ்ரீ சித்தி விநாயகர்
ஆலயத்தில் கேதார கௌரி விரதம்

0
209

வரலாற்று சிறப்புபெற்ற மட்டக்களப்பு வந்iதாறுமூலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளாகிய இன்றைய தினம் காப்பு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குருக்கள் க.ஜெயக்குமார் அவர்களினால் விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை இடம்பெற்றதும் அதன் பின்னர் கேதாரகௌரிஸ்வரர் பெருமானுக்கு பில்வ அஷ்டோத்திரம் இடம்பெற்று அதன் பின்னர் தேவார பாராயணம் இடம்பெற்றது மங்கள வாத்தியம் முழங்க தீபாராதனை இடம்பெற்றது.

அதன் பின்னர் கேதார கௌரி ஈஸ்வர விரதத்தை அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு காப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இம்முறை பெருமளவான அடியார்கள் 21நாள் விரதம் அனுஷ்டித்து இறுதி நாளாகிய இன்றைய தினம் காப்பு பெற்றுக்கொண்டனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகள் ஆராதனைகளில் கலந்துகொண்டு பெருமளவான பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆலயத்தில் பெரியவர்கள் தொடக்கம் சிறியவர்கள் என விரதம் அனுஷ்டிக்கப்பட்டு விரதத்தை கடைபிடித்தனர்.

இதன்போது ஆலய பிரதம குருக்கள் ஜெயக்குமார் அவர்களினால் கேதார கௌரி ஈஸ்வர விரதம் அனுஷ்டிப்பது விளக்கவுரை வழங்கினார்.

இன்றைய தினம் சூரியகிரகணம் என்பதினால் காலையிலிருந்து நண்பகல் வரைக்குமான காலப்பகுதிக்குள் பூசைகள் இடம்பெற்று காப்புகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.