வறிய மாணவர்களுக்கு, ஒரு நேர பால் வழங்கும் திட்டம், மன்னார் மடு கல்வி வலயத்தில், இன்று ஆரம்பம்

0
131

மன்னார் மாவட்டத்தில், பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, ஒரு நேர பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம், மன்னார் மடு கல்வி வலயத்தில், இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டம், மடு கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மடு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 23 பாடசாலைகளைச் சேர்ந்த, ஆயிரத்து 338 மாணவர்கள், திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், மடு வலயக்கல்வி பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.