குருநகரில் மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
148

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குருநகர் கடற்பகுதியில் மீன் பிடிக்க சென்ற சமயம் நெஞ்சு வலியினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலோசியஸ் ஜான்சன் வயது 40, என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடிர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் இன்றைய தினமும் ஒப்படைக்கப்பட்டது.