மட்டக்களப்பு காத்தான்குடியில் வைத்திய பரிசோதனை முகாம் இன்று காத்தான்குடி 4ம் குறிச்சி பலாஹ் கிளினிக் நிலையத்தில் இடம் பெற்றது.இலங்கை குடும்பத்திட்ட சுகாதார சேவை நிலையத்தின் மட்டக்களப்பு நிலையம் காத்தான்குடி சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து இந்த வைத்திய பரிசோதனை முகாமை நடாத்தியது.
இதில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்;.நசிர்தீன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்; பணிமனையின் வைத்திய அதிகாரி டாக்டர் டான் சௌந்தரராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சைகளையும் வைத்திய ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் போது தொற்றா நோய் தொடர்பான ஆலோசனைகளும் வழங்;கப்பட்டதுடன் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனையும் இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 15 கர்ப்பிணித்தாய்மாருக்கு இருபதாயிரம் ரூபா பெறுமதியான பிரசவப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சுகாதார சேவை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.நசிர்தீன் உட்பட தாதியர்கள் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.