மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் ஹெவர் அமைப்பானது ‘ வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம் ‘ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தை கீழ் கல்வி , சுகாதாரம் , வாழ்வாதாரம் போன்ற அடிப்படை சமூக அபிவிருத்தி வேளைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
இதன் ஒரு சமூக செயல்பாடாக ஹெல்ப் ஹெவர் அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு பூர்த்தியினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டன
இன்று முன்னெடுக்கப்பட இரத்ததான நிகழ்வில் ஆன்மீக அதிதியாக அருட்தந்தை மொறாயஸ் அடிகளார் ,மற்றும் சிறப்பு அதிதிகளாக அமைப்பின் திட்டத்திற்கான ஊக்குவிப்பாளர்களான சௌமினி ரவிசந்திரன் , தோமஸ் கந்தையா ,ஜெ . ரொசிடா ,இயற்கையின் மொழிகள் அமைப்பின் தலைவி காயத்திரி உதயகுமார் கலந்துகொண்டனர் .
இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்தியர் ஜி . சௌமியா பொதுசுகாதார பரிசோதகர் பி. எம் .எம் .பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் அனுபிரதாப் , ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஹெல்ப் ஹெவர் அமைப்பின் உறுப்பினர்கள் , குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டனர் .
ஹெல்ப் ஹெவர் அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு பூர்த்தியினை சிறப்பிக்கும் வகையில் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிகளை வழங்கிய குருதி கொடையாளர்களுக்கு ஹெல்ப் ஹெவர் அமைப்பின் சான்றிதழ் மற்றும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன