காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரை நகரில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
வரலாற்று பிரசித்தி பெற்ற ஈழத்து சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை உற்சவத்தினை நடத்தாமல் இருப்பதற்கு ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதற்கு நிர்வாகத்தினரால் பலதரப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டபோது திருவிழா உபயகாரர்களினால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பாலஸ்தாபனம் செய்ய இடைக்கால தடை உத்தரவினை ஊர் காவல்துறை நீதிமன்ற வழங்கி இருந்ததன் அடிப்படையில் திருவெம்பாவை உற்சவம் நடைபெறும் என்ற அடிப்படையில் த ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திருவெம்பாவை உற்சவத்தினை கொரோனா காலத்தில் நடத்தியது போல காலை 5 தொடக்கம் 7 மணிக்குள் திருவிழாவை நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சி எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவம்பா உற்சவத்தினை வழமை போல் சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஆலய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி காரைநகர் மக்களால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைகாரைநகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது,