மட்டக்களப்பு மாவட்ட மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவின் ஐயப்பன் சுவாமியின் மணிகண்ட மகர ஜோதி மண்டல பூஜை மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது
மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திர குழுவின் குரு சுவாமி நவநீதன் தலைமையில் ஐயப்பன் சுவாமிக்கான பஜனாம்ர்தம் இடம்பெற்று தொடர்ந்து விசேட தீபாராதனை பூஜைகள் பிரதம குரு சிவஸ்ரீ சிவயோக செல்வ சாம்ப ஸ்ரீ சாம்பசிவம் குருக்களினால் மண்டல பூஜை நடாத்தப்பட்டது
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ காயத்திரி பீடம் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஐயப்பன் சுவாமியின் மணிகண்ட மகர ஜோதி மண்டல பூஜை நிகழ்வில் பெருமளவான ஐயப்பன் சுவாமி பக்தர்கள் கலந்துகொண்டு பூஜை வழிபாட்டினை சிறப்பித்தனர்