ஒருவரின் சடலத்தால் புகையிரத சேவைகள் தாமதம்!

0
188

புகையிரதத்தில் மோதியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் அங்கிருந்து அகற்றப்படாமையால், மலையகப் புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் பிலிமத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபரின் சடலம் இன்று காலை 9 மணி வரை புகையிரதப் பாதையில் இருந்து அகற்றப்படாததால் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பின்னர் பேராதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த விபத்தில் மரணித்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.