மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மும்முரம்

0
205

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் வழிகாட்டலில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோட்டமுனை பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பார் வீதி சின்ன உப்போடை கிராம சேவையாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.