மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில்சுய கற்றல் நிலையம் அங்குரார்ப்பணம். செய்யப்பட்டது.கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பண வைபவம் நடைபெற்றது
க.பொ.த (சாதாரண) தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டு மத்திய கல்லூரியில் 1997ம் ஆண்டு சாதாரண தரம் , 2000ம் ஆண்டு உயர் தரம் கற்ற பழைய மாணவர்களும். இமாறா நிறுவனமும் இதற்கான முழுமையான நிதிப் பங்களிபாக நான்கு மில்லியன் ரூபா இச் சுய கற்றல் நிலையத்தின் ஒரு வருடத்திற்கு மதிப்பிடப்பட்டு மத்திய கல்லூரியின் விடுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள், கல்லூரியின் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், சுய கற்றல் நிலையத்தில் கற்பதற்கு தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் பங்குபற்றினர்.
இத் திட்டத்தில் மாணவர்களுக்கு கற்பித்தலுடன் கூடிய சுய கற்றல், அல்குர்ஆன் ஓதல் மற்றும் தொழுகை என்பனவும் இடம்பெறவுள்ளன.