பிரதேச செயலகத்தில் பொது மக்களுக்கு
பொங்கல் பொருட்கள் வழங்கல்

0
215

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பொங்கல் விழாவும் பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அறப்பணி மையத்தின் ஊடாக பொங்கல் விழாவும் பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அறப்பணி மையத்தின் செயற்பாட்டாளர்களின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்று இருந்தன்.

தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரம் பாதிப்புற்ற 60 குடும்பங்களுக்கும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தொண்டர்களுக்கும் இவ்வாறு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இவ் பொங்கல் விழா மற்றும் பொது மக்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான நிதிப் பங்களிப்பினை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அறப்பணி மையத்தின் செயற்பாட்டாளர்களான திருக்குமார் கலைச்செல்வி சுதா உஷா லீலாவதி மற்றும் கௌரி ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தமிழர் பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் பந்தல்கள் போடப்பட்டு சம்பிரதாய முறையில் பொங்கல் பொங்கப்பட்டு இருந்ததோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்கள் தைப்பொங்ல் தொடர்பான சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தி இருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் நிருவாக உத்தியோகத்தர் மோகனராஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள்என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.