அம்பாறை கல்முனை கல்வி வலயத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் பாடசாலைகளுக்கு மடிக்கணணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

0
203

அம்பாறை கல்முனை கல்வி வலயத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு, மடிக்கணினிகள் மற்றும் பாடசாலை
மாணவர்களுக்கு, கற்றல் உகரணங்களும், றிஸ்லி முஸ்தபா கல்விக்கான உதவி அமைப்பின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன.
மடிக்கணணிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில்
அதிபர் எம்ஜேஎம் சகிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா ;நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டார்.
கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை, அல்- மிஸ்பா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயம் மற்றும்
நற்பிட்டிமுனை சுவாமி விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு n
பறுமதியான மடிக்ணினிகள் கையளிக்கப்பட்டன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணினி தொழில் நுட்ப பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.ஏ.ஐயூப்கான்
திடீர் மரணவிசாரணையதிகாரி அல்-ஜவாஹிர் உள்ளிட்ட பலர் நிகழ்வ்pல் கலந்துகொண்டனர்.