உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.